கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்... டெல்லி அமைச்சர் அதிஷி திட்டவட்டம்!

அதிஷி உடன் அர்விந்த் கேஜ்ரிவால்
அதிஷி உடன் அர்விந்த் கேஜ்ரிவால்

“டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகினால், டெல்லியில் சட்டவிரோதமாக ஆட்சியை கலைப்பதற்கு பாஜகவுக்கு சாதகமாகிவிடும்” என டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி விடுகிறது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால்

இது தொடர்பாக இன்று பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லி மாநில நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகுவாரா என கேள்வி எழுப்புகின்றீர்கள். இந்தியாவில் இரண்டு விதமான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான வாய்ப்புகள் அவருக்கு முன் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே அவர் பதவி விலக வேண்டும். ஆனால், இதுவரை கேஜ்ரிவாலை குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கவில்லை” என்றார்.

டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி அமைச்சர் அதிஷி

மேலும், ”டெல்லி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை அர்விந்த் கேஜ்ரிவால் பெற்றுள்ளார். எனவே, அவர் பதவி விலக வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை. ஒருவேளை அர்விந்த் கேஜ்ரிவால் இன்று பதவி விலகினாலும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பாஜகவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே கேஜ்ரிவால் பதவி விலகுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார் அவர்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in