காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இழிவான கருத்து... சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 5 அன்று தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் போது, ​​தேர்தல் நடத்தை விதிகளை கேசிஆர் மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. கேசிஆரின் பேச்சுக்கள் தொடர்பாக முன்னதாகவே பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த நிலையில், மீண்டும் அவர் சர்ச்சையை கிளப்பியது, ஆணையத்தின் நடவடிக்கைக்கு வித்திட்டது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஏபல் 5 சம்பவம் தொடர்பாக தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சீனியர் துணைத் தலைவர் ஜி. நிரஞ்சனிடம் இருந்து ஏப்ரல் 6 அன்று தேர்தல் ஆணையம் விரிவானப் புகார் ஒன்றைப் பெற்றுள்ளது. அதில் கே. சந்திரசேகர் ராவ் சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மோசமான, இழிவான மற்றும் ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் புகார் தொடர்பாக ஏப்ரல் 18 அன்று காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்குமாறு கேசிஆருக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால், ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு கேசிஆர் ஆளாக நேரிடும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், மக்களவைக்கான பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதில் 2024 மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. அது முதல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

இதன்படி மொத்தப் புகார்களில் 51 பாஜக-வை சேர்ந்தவை என்றும், அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதர புகார்களில் 59 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் 51 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 2 தேசிய கட்சிகளுக்கு அப்பால் இதர தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் 90 என்றும், அதில் 80 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைய தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளிடையே சமநிலையை நிலைநிறுத்த, மாதிரி நடத்தை விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட சில முன்மாதிரியான முடிவுகளை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இழிவான மற்றும் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் பெண்களின் கண்ணியம் மற்றும் மரியாதையை நிலைநாட்ட உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அதில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in