கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்ட இலவச பயணச்சீட்டு மாலை
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்ட இலவச பயணச்சீட்டு மாலை

முதல்வர் சித்தராமையாவுக்கு இலவச பயணச்சீட்டு மாலை... சட்டக் கல்லூரி மாணவியின் அசத்தல் அன்பளிப்பு!

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் இலவச பேருந்து பயணச்சீட்டால் மாலை உருவாக்கி அதனை பரிசளித்துள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் இந்த வாக்குறுதியை தேர்தல் காலத்தில் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை வழங்கி இருந்தது.

சட்டக்கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர் இந்த மாலையை முதல்வருக்கு பரிசளித்தார்
சட்டக்கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர் இந்த மாலையை முதல்வருக்கு பரிசளித்தார்

சொன்னது போலவே கர்நாடகாவில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தது சித்தராமையா அரசு. இந்த நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலுக்காக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர் இந்த மாலையை முதல்வருக்கு பரிசளித்தார்
சட்டக்கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர் இந்த மாலையை முதல்வருக்கு பரிசளித்தார்

நேற்று ஹாசன் மாவட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா பிரச்சாரத்திற்காக சென்றார். அப்போது அவரை அணுகிய சட்டக் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர், சித்தராமையாவிற்கு இலவச பயணச் சீட்டுகளாலான மாலை ஒன்றை பரிசாக வழங்கினார். அப்போது, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் மிகுந்த பயன் தருவதாகவும் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த மாணவி முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in