முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

பிரதமர் மோடி, கபில் சிபல்
பிரதமர் மோடி, கபில் சிபல்
Updated on
2 min read

” ‘மக்களின் செல்வத்தை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் மறு விநியோகம் செய்யும்' என கூறிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2006-ம் ஆண்டில் கூறிய கருத்தை குறிப்பிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே, நகர்ப்புற நக்சல் மனநிலை உடையவர்கள் உங்கள் மங்கள சூத்திரத்தை கூட விட்டுவைக்க மாட்டார்கள். தங்கத்தை தாய்மார்கள், சகோதரிகளுடன் சேர்ந்து கணக்கிட்டு, பின்னர் அந்த சொத்தை விநியோகிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

அவர்கள் அதை யாருக்கு விநியோகிப்பார்கள்? முன்னதாக, காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று அவர்கள் கூறியிருந்தனர். அப்படியானால் இந்த சொத்து யாருக்கு விநியோகிக்கப்படும்? இது ஊடுருவல்காரர்களுக்கு விநியோகிக்கப்படும்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?" என பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியதாவது:

“பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக நீங்கள் (பிரதமர் மோடி) பேசுகிறீர்கள். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இப்படி ஒரு நிலைக்குத் தரம் தாழ்ந்து விட்டது. வரலாற்றில் இதுவை இப்படி நடந்ததில்லை. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் இதனை கண்டிக்க வேண்டும். மேலும், பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!

மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!

குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ரகளை... ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கடும் மோதல்!

நேரடி வரி வசூல் 19,58,000 கோடி ரூபாய்... கடந்த நிதியாண்டில் வரி வசூலில் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in