‘டெம்போ நிறைய கருப்பு பணம் அனுப்பிய அம்பானி - அதானியை விசாரிக்க அமலாக்கத்துறையை பிரதமர் மோடி எப்போது அனுப்புவார்?’

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ நிறைய கருப்பு பணம் அனுப்பியதான தனது குற்றச்சாட்டு தொடர்பாக, அம்பானி மற்றும் அதானியை விசாரிக்க அமலாக்கத்துறையை பிரதமர் மோடி எப்போது அனுப்புவார்?’ என்று காங்கிரஸ் கட்சியின் கன்ஹையா குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜேஎன்யூ மாணவர் தலைவரும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான கன்ஹையா குமார், பிரதமர் மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ’காங்கிரஸ் கட்சிக்கு டெம்போக்கள் நிறைய பணம் அனுப்பப்பட்டது உறுதியெனில், அம்பானி மற்றும் அதானியை விசாரிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை அமைப்புகளை அனுப்ப வேண்டியதுதானே’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

தனது சொந்த மாவட்டமான பெகுசராய்யில் இன்றைய தினம் கன்ஹையா குமார் வாக்களித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கேள்வி எழுப்பினார். "பிரதமர் மோடி தான் ஆட்சியில் இருப்பதை மறந்துவிட்டு, எதிர்க்கட்சி வரிசையில் நின்று கொண்டு பேசுகிறார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறும்போது கேலிக்குரியதாகத் தெரிகிறது," என்ற பிரதமர் மோடியை சாடினார்.

"பிரதமருக்கு இதுபோன்ற தகவல் எப்படி கிடைத்தது? அவர் அதை உருவாக்குகிறாரா? இல்லையென்றால், அவர் ஏன் புகார் செய்கிறார்? டெம்போக்கள் நிறைய ரொக்கம் அனுப்பியதாக மோடி சந்தேகிப்பவர்கள் மீது உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சோதனை நடத்த வேண்டும்” என்று கன்ஹையா குமார் கோரியுள்ளார்.

கன்ஹையா குமார்
கன்ஹையா குமார்

கடந்த வாரம் தெலங்கானா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பானி மற்றும் அதானியுடன் காங்கிரஸ் கட்சிக்கு தனி டீல் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அம்பானி - அதானியிடம் இருந்து டெம்போ நிறைய கருப்பு பணத்தை காங்கிரஸ் பெற்றுள்ளதாவும் அவரது குற்றச்சாட்டு விரிந்தது. இது பொதுவெளியில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, இதனைப் பிடித்துக்கொண்டு மோடி மற்றும் அதானியை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தாக்கி வருகின்றனர். அதில் தற்போது கன்ஹையா குமாரும் சேர்ந்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in