தேஜஸ்வி யாதவா... தேஜஸ்வி சூர்யாவா? கன்பீஸ் ஆன கங்கனா, சொந்தக் கட்சிக்காரரை வெளுத்துவாங்கிய வினோதம்

தேர்தல் பிரச்சாரத்தில் கங்கனா ரனாவத்
தேர்தல் பிரச்சாரத்தில் கங்கனா ரனாவத்

பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதற்குப் பதிலாக, சாெந்த கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவை, நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இந்த தேர்தல் சீசன் தொடங்கியதிலிருந்தே கங்கனாவை மையமாக வைத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. முதலில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, கங்கனாவின் அரை குறை ஆடை உடையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அதைத் தொடர்ந்து ஊடகம் ஒன்றில் அளித்த நேர்காணலின் போது இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என கூறியது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய நடிகை கங்கனா ரனாவத், பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதற்குப் பதிலாக, தனது சொந்த கட்சியைச் சேர்ந்தவரும் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யாவை வெளுத்து வாங்கினார்.

அந்த பிரச்சார நிகழ்ச்சியில் கங்கனா பேசுகையில், "கெட்டுப்போன இளவரசர்களின் கட்சி இருக்கிறது. சந்திரனில் உருளைக்கிழங்கு விளைய விரும்பும் ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, போக்கிரித்தனம் செய்து மீன் சாப்பிடும் தேஜஸ்வி சூர்யாவாக இருந்தாலும் சரி... அல்லது வினோதமாக பேசும் அகிலேஷ் யாதவாக இருந்தாலும் சரி... இந்த நாட்டின் மொழி புரியாதவர்களும், கலாசாரம் புரியாதவர்களும் எப்படி இந்த நாட்டை வழிநடத்த முடியும்?” என்றார்.

தேஜஸ்வி சூர்யா, தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி சூர்யா, தேஜஸ்வி யாதவ்

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், கடந்த ஏப்ரல் 9ம் தேதி அன்று ராம நவமி சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஹெலிகாப்டர் பயணத்தில் மீன் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதற்கு பதிலாக பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவை, கங்கனா விமர்சித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in