மத்திய அரசை விமர்சித்தால் தீவிரவாதமா?: உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் விதமாக செயல்படுவது பயங்கரவாத செயல் அல்ல எனவும், இந்தியாவின் பெருமை என்பது உருவங்கள் அற்ற ஒரு சொத்து எனவும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

ஆன்லைன் தளத்தில் இந்தியாவிற்கு எதிராக கட்டுரை எழுதியதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷா பஹத் என்பவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி, பஹத் சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆன்லைன் எழுத்தாளர் ஷா பஹத்
ஆன்லைன் எழுத்தாளர் ஷா பஹத்

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அத்துல் ஸ்ரீதரன், நீதிபதி மோகன்லால் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு மீது ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆன்லைனில் பஹத் தகவல்களைப் பதிவிட்டு வந்ததாக வாதிட்டார். இதனால் மத்திய அரசு மீது மோசமான கருத்தை விதிக்க பஹத் முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ”அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக் கொண்டால் மத்திய அரசு மீது விமர்சனம் வைக்கும் அனைவரின் செயலும் தீவிரவாதம் என்று வரையறுக்க வேண்டியிருக்கும். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், பேச்சுரிமையையும் பாதிக்கும் செயலாக அமையும்.

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் விதமாக செயல்படுவது பயங்கரவாதச் செயல் அல்ல. இந்தியாவின் பெருமை என்பது உருவங்கள் அற்ற ஒரு சொத்து” என்று கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஷா பஹத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பஹத் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in