
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளைப் பட்டியலிட்டு, உடனடியாக நிறைவேற்றாவிட்டால், நவம்பர் 1 முதல் தொடர் போராட்டம் நடடத்தப்படும் என்று ஜாக்டோ -ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவில் நான்கு மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவதாக தெரிவித்த பிறகும்கூட பழைய ஓய்வூதியத்திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அமல்படுத்தாமல் இருப்பது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும், பணியாளர்களையும் பெருத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதலமைச்சரின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கைகள் மெல்லத் தகர்ந்து வரும் சூழ்நிலையில் நாங்கள் எங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஜனநாயகம் அனுமதித்துள்ள போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க வேண்டிய முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டக்குழு அறிவித்துள்ள இயக்கங்களை நடத்திடுவதற்கு நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம். இதன்படி நவம்பர் 1ம்தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 15 முதல் நவம்பர் 24 வரை ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும் நடைபெறும்.
நவம்பர் 25 மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் மற்றும் டிசம்பர் 28 லட்சக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியா், அரசுப்பணியாளர் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!