பரபரப்பு... ஹைதராபாத்தில் 14 இடங்களில் ஐ.டி ரெய்டு... பிஆர்எஸ் எம்எல்ஏ அப்செட்!

எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்
எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்

ஹைதராபாத்தில் பிஆர்எஸ் எம்எல்ஏ மாகந்தி கோபிநாத் தொடர்புடைய 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்
எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி( பிஆர்எஸ்) கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் மாகந்தி கோபிநாத். இவர் தொடர்புடைய பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் எம்எல்ஏ மாகந்தி கோபிநாத் தொடர்புடைய பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்
எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்

மேலும் தொழிலதிபர்கள் பிரசாத், கோட்டேஸ்வர ராவ், ரகுவீர், வஜ்ரநாத் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தொழிலதிபர்கள் எம்எல்ஏ மாகந்தி கோபிநாத்தின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. வரி ஏய்ப்புக்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிதி பரிவர்த்தனை மற்றும் கணினி, மடிக்கணினிகள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளையும் அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனை பிஆர்எஸ் எம்எல்ஏ மாகந்தி கோபிநாத் ஆதரவாளர்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையால் மாகந்தி கோபிநாத் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in