2024 ஐபிஎல் கிரிக்கெட்... மீண்டும் வர்ணனைக்கு வருகிறார் நவ்ஜோத் சிங் சித்து!

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து
Updated on
1 min read

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நவ்ஜோத் சிங் சித்து ஐபிஎல் 2024-ல் வர்ணனையாளராக மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்குகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். விழாவைத் தொடர்ந்து இந்த சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கும் நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தனது எக்ஸ் வலைதளத்தில், நவ்ஜோத் சிங் சித்து ஐபிஎல் 2024-ல் வர்ணனை செய்யவுள்ளதாக பதிவிட்டுள்ளது.

19 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வீரராக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யத் தொடங்கினார். தனது ஒற்றை வரி வர்ணனை மூலம் புகழ்பெற்ற இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருந்துள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

பிறகு, பாஜக சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது, காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக இருக்கிறார். விளையாட்டு, கலை, அரசியல் என பல முகங்கள் கொண்ட சித்துவின் பேச்சுக்கு ரசிகர்கள் அதிகம். எனவே, சித்துவின் வர்ணனையுடன் இந்த ஐபிஎல் தொடரை காண கிரிக்கெட் ரசிகர்கள் கூடுதல் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in