கல்வீச்சில் காயம்... ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திர மாநிலம், கன்னவரத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரம்
ஆந்திர மாநிலம், கன்னவரத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரம்

கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த சனிக்கிழமை அன்று விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள சிங் நகர், விவேகானந்தா பள்ளி மையம் அருகே அவர் பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்திலிருந்த மர்ம நபர், திடீரென ஜெகன் மோகன் ரெட்டியை நோக்கி கல் வீசினார்.

கல்வீச்சில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெற்றியில் காயம்
கல்வீச்சில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெற்றியில் காயம்

இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடதுபக்க நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பிரச்சாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் நேற்று ஒரு நாள், ஜெகன்மோகன் ரெட்டி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவர் விஜயவாடா, கேசரப்பள்ளியில் இருந்து இன்று மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் கன்னவரம், ஆட்கூர், வீரவள்ளி கிராஸ், அனுமன் சந்திப்பு மற்றும் அப்பகுதி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   

இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in