இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பஅலை வீசுகிறது.

எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும், நாளையும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.16 முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in