4 வாக்காளர்களே இருக்கும் வாக்குச்சாவடிக்கு 6 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு... உத்தராகண்டில் விநோதம்!

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

உத்தராகண்ட் மாநிலத்தில் 4 பேர் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட 6 பேர் கொண்ட குழு தேர்தல் பணியாற்ற உள்ளது.

18 வது மக்களவை பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் மிக வயதான வாக்காளர்கள், அதிக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மலை கிராமங்களில் விலங்குகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படுவது என பல சுவாரஸ்யங்கள் இந்திய நாட்டு தேர்தல் கண்டு வருகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

இந்த வரிசையில் உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமே 4 வாக்காளர்கள் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு 6 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள விநோத நிகழ்வும் அடங்கியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளும் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன.

இம்மாநிலத்தில் 4 வாக்காளர்களை மட்டுமே கொண்ட ஒரு வாக்குச்சாவடி உள்ளது. இந்த 4 வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கொண்ட ஒரு சிறப்பு வாக்குப்பதிவு குழு இந்த வாக்குச் சாவடியில் பணிபுரிய உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் 11,729 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலம்
உத்தராகண்ட் மாநிலம்

இம்மாநிலத்தில் மொத்தம் 83,37,914 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 43,17,579 பேர் ஆண் வாக்காளர்கள். 40,20,038 பேர் பெண் வாக்காளர்கள். 297 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். கூடுதலாக, மாநிலத்தில் 90,554 ஆண்கள் மற்றும் 2,633 பெண்கள் உள்பட 93,187 சேவை வாக்காளர்கள் உள்ளனர். சேவை வாக்காளர்கள் என்பது ராணுவம், இந்திய அரசு பணிகளில் உள்ளவர்களை குறிப்பதாகும்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in