அரியாசனம் யாருக்கு? அதிகரிக்கும் குதிரை பேரத்தால் பரபரக்கும் பாகிஸ்தான்

நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ - இம்ரான் கான்
நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ - இம்ரான் கான்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகளின்படி பிரதமர் அரியாசனம் யாருக்கு என்பதில், பாகிஸ்தானின் 3 பிரதான கட்சிகளுக்கு மத்தியில் இழுபறி நீடிக்கிறது.

பிப்.8 அன்று நிறைவடைந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலை அடுத்து, நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் என முன்னாள் பிரதமர்களை தத்தம் தலைமையாக கொண்ட இரு பிரதான கட்சிகளும் தங்களுக்கே பெரும்பான்மை என்று முழங்கி வருகின்றன.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

சிறையில் இருக்கும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தேர்தலில் நிற்கத் தடை செய்யப்பட்டிருப்பதால், அக்கட்சியினர் சுயேட்சைகளாக நின்று பெரும்பாலான இடங்களில் வாகை சூடி வருகின்றனர். ஆனால் அவர்கள் தனிப்பட்ட கட்சியாக தங்களை முன்னிறுத்த முடியாது என்பதால், நவாஸ் ஷெரீப் தங்களுக்கே பெரும்பான்மை வாய்த்திருப்பதாக கூறுகிறார்.

ஏஐ தயவில் உருவாக்கப்பட்ட இம்ரான் கான் வீடியோ, பெரும்பான்மை தங்களுக்கே என அறைகூவல் விடுத்ததில், அவரது கட்சியினர் உற்சாகம் கொண்டிருக்கின்றனர். ஆனால் சுயேட்சைகள் கூடி ஆட்சியமைப்பதில் இம்ரான்கானி பிடிஐ கட்சி சவால்களையும் எதிர்கொண்டுள்ளது.

இந்த 2 கட்சிகளுக்கும் அப்பால் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பிபிபி கட்சி, மூன்றாவது இடம் வகித்தாலும், தனது முன்னாள் கூட்டாளியான இம்ரான் கட்சியை உதறி, நவாஸ் ஷெரீப்பின் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. தனது தயவின்றி நவாஸ் ஷெரீப்பால் ஆட்சியமைக்க முடியாது என்பதால், பிலாவல் கட்சி பேரத்தை கூட்டியுள்ளது.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்
பாகிஸ்தான் பொதுத் தேர்தல்

பிலாவல் தோள்கொடுத்தாலும், நவாஸ் ஷெரீப்புக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் ஆதரவு தேவைப்படுகிறது. இம்ரான் கான் கட்சியின் சுயேட்சை வேட்பாளர்களை குதிரை பேரத்தில் வளைக்க நவாஸ் ஷெரீப் கட்சி முயன்றது. ஆனால் அந்த சுயேட்சைகளின் விசுவாசம் காரணமாக அந்த முயற்சிகள் பிசுபிசுத்தன.

முயற்சியை கைவிடாத நவாஸ் ஷெரீப், சுயேட்சைகளை வளைக்க அமைச்சர் பதவி உள்ளிட்ட ஆசைகளைக் காட்டி குதிரை பேரத்தை தீவிரமாக்கி உள்ளார். பாகிஸ்தான் ராணுவமும் நவாஸ் பின்னாக இருப்பதால், அவர் தலைமையிலான ஆட்சி அரியாசனத்தில் அமரவே இப்போதைய சூழல் வழி செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in