
உத்தரப் பிரதேசத்தில், நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஐஏஎஸ் பணியை அதிகாரி ஒருவர் துறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பேட்ஜைச் சேர்ந்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் சிங். 2015-ம் ஆண்டு வரை டெல்லி அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், 2018-ம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2022 ஜூன் மாதம் இணைந்தார். பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் குஜராத்தில் நடைபெற்ற தேர்தலை ஒட்டி அவரை தேர்தல் பார்வையாளராக நியமித்திருந்தது. ஆனால், அவரது பணி திருப்தி அளிக்காததோடு, அவரது செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அபிஷேக் சிங் தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக ஐஏஎஸ் அதிகாரி பணியை, அபிஷேக் சிங் துறந்துள்ளதாக கூறப்படுகிறது.
அபிஷேக் சிங்கின் மனைவி துர்கா சக்தி நாக்பாலும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவார். அவர் தற்போது சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்