நான் ஒரு சனாதனி... ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!

வள்ளலார் உருவச்சிலையை திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
வள்ளலார் உருவச்சிலையை திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated on
1 min read

என்னை விமர்சிப்பவர்களை ஒதுக்க மாட்டேன். காரணம் நான் ஒரு சனாதனவாதி என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிதாக வள்ளலார் திருவருவுச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ”என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது, சனாதனத்தின் வெளிப்பாடு.” என்றார்.

ஆளுநர் ரவி பேச்சு
ஆளுநர் ரவி பேச்சு

முன்னதாக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”திருவருட்பிரகாச வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டும் அவரது செய்தி ஒரு நிலையான உலகத்திற்கு முக்கியமானது. அவரது ஒளி நம் தேசம் பெருமை அடைய வழி காட்டட்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in