72 ஆண்டுகளில் 3 பெண்களை மட்டுமே மக்களவைக்கு அனுப்பிய இமாச்சலப் பிரதேசம்!

அரசியலில் பெண்கள்
அரசியலில் பெண்கள்

கடந்த 72 ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 3 பெண்கள் மட்டுமே மக்களவைக்கு வந்துள்ளனர். இந்த முறை, இரண்டு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 49 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 72 ஆண்டுகளில் 3 பெண்களை மட்டுமே அம்மாநிலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
ராஜகுமாரி அம்ரித் கவுர், சந்திரேஷ் குமாரி, பிரதிபா சிங் ஆகிய 3 பேரே அந்த பெண்கள் ஆவர். இவர்கள் மூவரும் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

ராஜகுமாரி அம்ரித் கவுர், சந்திரேஷ் குமாரி, பிரதிபா சிங்
ராஜகுமாரி அம்ரித் கவுர், சந்திரேஷ் குமாரி, பிரதிபா சிங்

இந்நிலையில் இம்மாநிலத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறும் 7வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போதைய தேர்தலில் பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே பெண் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

மண்டி தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், காங்க்ரா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரேகா ராணியும் வேட்பாளர்களாக உள்ளனர்.

இமாச்சலில் இருந்து மக்களவைக்கு பெண் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்து, இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் ரமேஷ் சவுகான் கூறுகையில், “எளிய பின்னணியில் இருந்து அரசியலில் உயர்ந்து, தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பது இன்னும் நாட்டில் ஒரு பெரிய சவாலாக உள்ளது.

கங்கனா ரனாவத், ரேகா ராணி
கங்கனா ரனாவத், ரேகா ராணி

இதற்கு இமாச்சலப் பிரதேசம் விதிவிலக்கல்ல. தற்போது, மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் பெண்கள் 49 சதவீதம் உள்ளனர். ஆனால் அவர்களின் பிரதிநிதித்துவம் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. இது தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில், முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது முக்கியம். இந்த அதிகாரம் பொதுவாக ஆண்களிடம் உள்ளது. பெண்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் வரை அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாகவோ, தங்களிடம் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு சமமாகவோ உருவெடுக்கமாட்டார்கள்.

இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கமல் மனோகர் ஷர்மா கூறுகையில், "மாநிலத்தில் பெண்களின் மதிப்பு நிலை அதிகமாகவே உள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இங்குள்ள மண்டி, கின்னவுர், காங்க்ரா மாவட்டங்களில் பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் சட்டப்பேரவைக்கு செல்ல பெண்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.” என்றார்.

68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல் சட்டப் பேரவையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது. 1967 வரை இம்மாநில பேரவைக்கு எந்தப் பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அரசியலில் பெண்களின் பங்கேற்பு
அரசியலில் பெண்களின் பங்கேற்பு

1977 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டுமே சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். இடையில் 1998 தேர்தலில் மாநில சட்டப்பேரவைக்கு அதிக எண்ணிக்கையாக 7 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இமாச்சலப் பிரதேசத்திலிருந்து இதுவரை மாநிலங்களவைக்கு 8 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in