கடும் வெயிலால் வந்த சோதனை... திருச்சியில் வாக்குப் பதிவு குறைய வாய்ப்பு!

திருச்சியில் கடும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள்
திருச்சியில் கடும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள்

திருச்சியில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ள நிலையில், கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடியதால் வாக்குப்பதிவு சதவீதம் குறையலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்ட இருந்தது. இன்று காலை முதலே திருச்சியில் வெயில் சற்று அதிகமாகவே இருந்த நிலையில், மதியம் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதன் காரணமாக, பொதுமக்களும் நடமாட்டத்தைக் குறைத்து வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

வணிக நிறுவனங்கள், கடைகள் அடைப்பு
வணிக நிறுவனங்கள், கடைகள் அடைப்பு

மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் திருச்சியில் உள்ள பெரும்பாலான சாலைகள் ஆளரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. திருச்சி மக்களவை தொகுதியில் மூன்று மணி நிலவரப்படி 49.27 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. வெயில் காரணமாக, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் இங்கு வாக்கு பதிவு சதவீதம் குறையலாம் எனச் சொல்லப்படுகிறது.

வெறிச்சோடிய சாலைகள்...
வெறிச்சோடிய சாலைகள்...

இருப்பினும் மாலை 5 மணிக்கு பிறகு 6 மணி வரையிலும் வாக்களிக்க வரும் அனைவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ஓரளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் உயர வாய்ப்பு இருப்பதாக வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in