வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிந்ததால் வேட்பு மனு நிராகரிப்பு... உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!

வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிந்ததால் வேட்பு மனு நிராகரிப்பு... உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!

வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிந்துள்ளதாகக் கூறி, வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து  தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த  சேகர் என்பவர், தனது வேட்புமனு நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் முன்மொழிந்துள்ளதாக கூறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிய எந்த தடையும் இல்லை என வாதிடப்பட்டது. 

இதையடுத்து, சட்டவிரோத நிராகரிப்பை காரணம் காட்டி தேர்தல் வழக்கு தொடர்ந்தால், தேர்தலையே ரத்து செய்ய கோரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தற்போது தபால் வாக்குப்பதிவு துவங்கி விட்டது. வாக்குப்பதிவை தவிர பிற தேர்தல் நடைமுறைகள் முடிந்து விட்டதால் மனுதாரர் கோரிய நிவாரணம் வழங்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in