மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்... 2 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்... 2 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரத்தில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வைகோ
வைகோ

பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிமன்றம், புதிய விண்ணப்பம் அளிக்க மதிமுக-க்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், நீதிமன்றத்தின் உத்தரவின்படி மதிமுக சார்பில் புதிதாக விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதிமுகவின் புதிய மனுவிற்கு இரண்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கையும் முடித்து வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...  

#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரோட்டில் நடந்த திருமணம்... கிறிஸ்தவ பெயரால் இந்துப் பெண்ணின் திருமணத்திற்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!

ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in