மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்... தேர்தல் ஆணையம் பதில் தர நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய  வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைகோ
வைகோ

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக,  பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கட்சியின் பழைய சின்னமான பம்பரத்தில் போட்டியிட வேண்டும் என்று மதிமுக ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதற்காக திமுகவிடவும் பேசியுள்ளது.

இதற்கு திமுக சம்மதித்துள்ள நிலையில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியதைப் போல எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்,  ஜி.அருள்முருகன் அமர்வு இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in