அவர் ராகுல் காந்தி அல்ல; தேர்தல் காந்தி... கேசிஆர் மகள் கவிதா காட்டம்!

சந்திரசேகர ராவ் மகள் கவிதா
சந்திரசேகர ராவ் மகள் கவிதா

ராகுல் காந்தி தேர்தல் நேரத்தில் மட்டும் தெலங்கானா வருவதால் அவரை இனி 'எலக்சன் காந்தி' என அழைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா விமர்சித்துள்ளார்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வரும் நவம்பர் 30ம் தேதி நடக்க உள்ளது. டிசம்பர் 3ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாநிலம் முழுதும் இலவச பேருந்து பயணம் என்பது போன்ற இலவசங்களுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசி வருகிறது.

பாரத் ராஷ்ட்ர சமிதி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டர் 400 ரூபாய்க்கு அளிக்கப்படும், சமூக பென்ஷன் தொகை உயர்த்தப்படும் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா கூறியதாவது, “தெலுங்கானாவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தெலங்கானா வர உள்ளனர்.

அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை மட்டும் அளிப்பார்கள். ஆனால் ஒருபோதும் அதனை செயல்படுத்த மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி இங்கு வருவதால் அவரை 'எலக்சன் காந்தி' என அழைக்க உள்ளேன்” என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in