கேஜ்ரிவாலுக்கு ஹனுமன் ஜி இன்சுலின் கொடுத்தார்... அமைச்சர் சௌரப் பரத்வாஜ் பேச்சால் பரபரப்பு!

ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் (இடது)
ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் (இடது)

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுத்தவர் ஹனுமன் ஜி என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி சுகாதார துறை அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் கூறினார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால்

இந்நிலையில், கேஜ்ரிவால் மருத்துவரை சந்திக்கவும், அவருக்கு இன்சுலின் வழங்குவதற்கும் சிறை நிர்வாகம் மறுத்து வருவதாகவும், இது கேஜ்ரிவாலை மெதுவாக கொல்லும் முயற்சி என்றும், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், இன்சுலின் வேண்டும் என கேஜ்ரிவால் கோரிக்கை விடுக்கவில்லை என சிறை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதிய கேஜ்ரிவால், தனது உடலில் சர்க்கரை அளவு 320 ஐ எட்டிவிட்டதாகவும், தனக்கு உடனடியாக இன்சுலின் வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இதேபோல், தனக்கு இன்சுலின் வழங்கவும், குடும்ப மருத்துவரை தினமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திக்கவும் அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

டெல்லியில் இன்சுலினுடன் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம்
டெல்லியில் இன்சுலினுடன் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு எய்ம்ஸ் மருத்துவ குழு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்க உத்தரவிட்டது. இதற்கிடையே திகார் சிறை நிர்வாகம் கேஜ்ரிவாலுக்கு இன்று 2 யூனிட்டுகள் இன்சுலின் வழங்கியது. இதனை அறிந்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “ கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுத்தவர் ஹனுமன் ஜி” என்று கூறியுள்ளார்.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அமைச்சர் சவுரப் பரத்வாஜ் டெல்லியில் இன்று ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றார். அதில் இன்சுலின் குப்பிகளால் ஆன கதாயுதத்தை அவர் ஏந்திச் சென்றார். மேலும், அவருடன் ஹனுமன் வேடத்தில் வந்தவர் கைகளில் இன்சுலின் குப்பிகளை வைத்திருந்தார்.

அப்போது சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “கேஜ்ரிவாலுக்கு சிறை அதிகாரிகளும், மத்திய அரசும் இன்சுலின் வழங்க தவறிய நிலையில், ஹனுமான் ஜி தான் தனது ஜென்ம உத்ஸவத்தில் கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுத்தார். ஹனுமனுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in