
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள், 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்தும், சிலரை உயிருடன் எரித்தும் கொலை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த காசா இஸ்ரேல் வசம் இருந்த நிலையில் தற்போது அதனை மீண்டும் கைப்பற்ற அந்நாடு முயற்சி செய்கிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ஏவுகணை உள்ளிட்டவைகளை கொண்டு மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளால், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது தீவிரம் பெற்றுள்ள போரால் சுமார் 15,000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் வெறியாட்டம் அதிகமாகி இஸ்ரேலில் உள்ள கஃபர் ஆசா பகுதியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்தும், சிலரை உயிருடன் எரித்தும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொலை செய்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கிராமத்தை நாசமாக்கியதாகவும், வீடுகள் மற்றும் வாகனங்களையும் எரித்ததாகவும், காற்றில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து துர்நாற்றம் அதிகமாக இருந்தது என்றும் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!