
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பலவற்றிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கருத்து மோதல் நடந்து வருகிறது. சனாதனம் உள்ளிட்ட விவகாரங்களிலும் ஆளுநர் மற்றும் அரசுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இந்தநிலையில், மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளையொட்டி ஒரே மேடையில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இன்று பங்கேற்றனர். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் காந்தியின் நினைவைப் போற்றக்கூடிய பஜனைப் பாடல்களை மாணவிகள் பாடினர். அதனை ஆளுநரும், முதல்வரும் ரசித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!