பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்

பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விட்டது. ஒரு வாசல் இரு வீடு என இந்த சீசன் புதிய கான்செப்ட் உடன் வந்திருக்கிறது. கமல்ஹாசன் வீட்டை சுற்றி காண்பித்ததும் தாமதமின்றி போட்டியாளர்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்து விட்டார். இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் உள்ளே நுழைந்து இருக்கிறார்.

ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு ஒரு பரிசு கொடுத்து அனுப்புவது போல இந்த சீசனிலும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசன் பரிசு கொடுத்து அனுப்பி இருக்கிறார். அந்த வகையில் சுரேஷுக்கு அவரது பெயர் போட்ட செயின் ஒன்றை கொடுத்து உள்ளே அனுப்பினார். உள்ளே முதல் ஆளாக நுழைந்த கூல் சுரேஷை பிக் பாஸ் வெல்கம் செய்தவுடன் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்தார். அங்கு அவரிடம் நீங்கள் தான் இந்த வீட்டின் முதல் கேப்டன் என்று சொல்லி ’கேப்டன்’ என்ற அடையாளம் போட்ட ஆர்ம் பேட்ச் ஒன்றை கொடுத்தார்.

 பிக் பாஸ்
பிக் பாஸ்

அதன் பிறகு ஒவ்வொரு சீசனிலும் கேப்டனுக்கு என்று கொடுக்கப்படும் தனி சலுகைகள் போலவே, இந்த சீசனிலும் கேப்டனாக இருப்பவரை நாமினேஷனில் எடுக்க முடியாது போன்றவற்றை பிக் பாஸ் சொல்லி விட்டு, அடுத்ததாக உள்ளேன் நுழையும் போட்டியாளர்களுடன் விவாதம் செய்து இந்த கேப்டன் பேட்சை தகவைத்துக் கொள்ள வேண்டும் என முதல் திரியை கொளுத்தி போட்டார்.

வழக்கமாக போட்டியாளர்கள் நுழைந்து ஒரு தினமாவது செட் ஆன பிறகுதான் பஞ்சாயத்து ஆரம்பிக்கும். ஆனால், பிக் பாஸ் கடந்த சீசனில் முதல்நாளே பஞ்சாயத்தை ஆரம்பித்தார். இப்போது ஒருபடி மேலே போய் இந்த சீசனில் முதல் போட்டியாளர் உள்ளே நுழைந்த உடனேயே திரியை கிள்ளி போட்டு இருக்கிறார்.

இந்த சீசனில் பஞ்சாயத்துகளுக்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in