புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார் பெருமாள்.

புரட்டாசி மாதத்தின் எல்லா நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை என்பது ஐதீகம்.

வெங்கடேசபெருமாள்
வெங்கடேசபெருமாள்

பெருமாள் ஆலயங்களில் புரட்டாசி மாதத்தில் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்களும் ஆராதனைகளும் அமர்க்களப்படும். இந்த மாதத்தில் பெருமாளுக்கு கைப்பிடி துளசி கொடுத்தாலே, அதில் மகிழ்ந்து, நாம் கேட்கும் வரங்களை அருள்வார் பெருமாள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோயிலுக்கு தொடர்ந்து சென்று வழிபடுகிற பக்தர்களைப் போல, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை அன்று அருகில் உள்ள கோயிலுக்கோ மலையில் உள்ள கோயிலுக்கோ சென்று தரிசிப்பதும் தங்களால் இயன்ற தானங்களைச் செய்வதுமாக இருப்பார்கள்.

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள். முடிந்தால் பெருமாளுக்கு துளசி சார்த்துங்கள். தாயாருக்கு வெண்மை நிற பூக்கள் கொண்ட மாலையை, வெண் தாமரை மலர்களைச் சார்த்துங்கள்.

அதேபோல், ஆலயத்துக்குச் சென்று விட்டு, ஒரு ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் அல்லது புளியோதரை தானமாக வழங்குங்கள். நம் மனதில் உள்ள பயத்தையெல்லாம் போக்கியருளுவார் பெருமாள். திருமணம் முதலானவற்றுக்கு இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் திருமால்.

இதையும் வாசிக்கலாமே...

மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!

நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in