காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... ஒடிசா முன்னாள் அமைச்சர் ராஜினாமா!

கணேஷ்வர் பெஹரா
கணேஷ்வர் பெஹரா

ஒடிசாவில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கணேஷ்வர் பெஹரா கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணேஷ்வர் பெஹரா
கணேஷ்வர் பெஹரா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஒடிசா முன்னாள் அமைச்சருமான கணேஷ்வர் பெஹரா கட்சியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். புவனேஸ்வரில் உள்ள கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெஹெரா, ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஓபிசிசி) தலைவர் சரத் பட்டநாயக்குக்கு தனது ராஜினாமா கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏவாக, ஊழியராக ஒடிசா மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள கணேஷ்வர் பெஹரா, பிஜு ஜனதா தளம் கட்சியில் (பிஜேடி) சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவரை, கேந்திரபாரா சட்டமன்றத் தொகுதியில் பிஜேடி நிறுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிஜேடியின் சஷி பூசன், 6,320 வாக்குகள் வித்தியாசத்தில் கணேஷ்வர் பெஹேராவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தனது நலம் விரும்பிகளும், அவரது தொகுதி வாக்காளர்களும் தன்னை பிஜேடியில் சேர வலியுறுத்தி வருவதாக கணேஷ்வர் பெஹெரா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓபிசிசி முன்னாள் செயல் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிரஞ்சிப் பிஸ்வால், முன்னாள் அமைச்சர் சுரேந்திர சிங் போய், எம்எல்ஏ ஆதிரன் பாணிகிராஹி, முன்னாள் எம்எல்ஏ கே.சூர்யா ராவ் மற்றும் அன்சுமன் மொஹந்தி ஆகியோர் சமீப காலங்களில் பிஜேடியில் இணைந்துள்ளனர். அந்த வகையில், கணேஷ்வர் பெஹராவும் பிஜேடியில் சேருகிறார் என்ற தகவல் தொகுதி முழுவதும் பேச்சாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in