எனக்கு எப்ஐஆர் எல்லாம் பதக்கங்கள் போன்றவை: பாஜக வேட்பாளர் மாதவி லதா பேட்டி!

வாக்குச் சாவடியில் முஸ்லிம் பெண்களின் அடையாளத்தை சரிபார்க்கும் மாதவி லதா
வாக்குச் சாவடியில் முஸ்லிம் பெண்களின் அடையாளத்தை சரிபார்க்கும் மாதவி லதா

எப்ஐஆர் எல்லாம் எனக்கு பதக்கங்கள் வடிவில் வந்து சேர்வதாக, ஹைதராபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். இந்நிலையில் தெலங்கானாவில ஹைதராபாத் உள்ளிட்ட 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மாதவி லதா, தான் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் நேற்று வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தார்.

மேலும், முஸ்லிம் பெண்களின் பர்தாவை விலக்கி முகத்தை காண்பிக்குமாறும் கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து வேட்பாளர் மாதவி லதா மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர் ஏற்கெனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது, மசூதியை நோக்கி அம்பு எய்வது போன்று சைகை செய்து சர்ச்சையில் சிக்கினார். அந்த விவகாரத்திலும் இவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்குகள் எல்லாம் தனக்கு பதக்கங்களாக வந்து சேர்கின்றன என மாதவி லதா தெரிவித்துள்ளார்.

மசூதி நோக்கி அம்பு எய்வது போன்று சைகை செய்த மாதவி லதா (கோப்பு படம்)
மசூதி நோக்கி அம்பு எய்வது போன்று சைகை செய்த மாதவி லதா (கோப்பு படம்)

இது தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு சிறுமி வாக்களித்ததை வாக்குச் சாவடி அலுவலர் பிடித்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அது தொடர்பாக அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. அவர்கள் என் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சுதந்திரமாக உள்ளனர். ராம பானத்திலிருந்து (அம்பு) என் மீது வழக்குப்பதிவு செய்வது தொடங்கியது. மெடல்கள் (பதக்கங்கள்) போன்று எப்ஐஆர்-களைப் பெறுகிறேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in