சொன்னபடி ஊதியம் தரல... தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் திடீர் போராட்டம்!

தஞ்சையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினர், போலீஸார் சாலை மறியல்
தஞ்சையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினர், போலீஸார் சாலை மறியல்

தஞ்சாவூரில் தேர்தல் பணியாற்றியதற்கு முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பணியில், ஓய்வு பெற்ற போலீஸார், முன்னாள் ராணுவத்தினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டப்படி பேசிய ஊதியம் வழங்கக்கோரி தஞ்சை ஆயுதப்படை மைதானம் முன்பு சாலையில் அமர்ந்து ஓய்வு பெற்ற போலீஸார், முன்னாள் ராணுவ வீரர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து அவர்கள் கூறுகையில், ”ஓய்வு பெற்ற போலீஸார், முன்னாள் ராணுவத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோம். 4 நாள் வேலை. ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் 1,250 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், நாங்கள் 3 நாள் தான் பணிபுரிந்ததாக கூறி மூன்று நாள் ஊதியத்தை மட்டுமே வழங்கியுள்ளனர்” என்றனர்.

ரூ.4 ஆயிரம் வழங்குவதாக கூறிவிட்டு, ரூ.3 ஆயிரம் மட்டுமே அதிகாரிகள் வழங்கியதாக குற்றச்சாட்டு
ரூ.4 ஆயிரம் வழங்குவதாக கூறிவிட்டு, ரூ.3 ஆயிரம் மட்டுமே அதிகாரிகள் வழங்கியதாக குற்றச்சாட்டு

பேசியபடி தங்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தின்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in