சென்னையிலும் அமலாக்கத்துறை அதிரடி.... பெல்லாரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்குச் சொந்தமான 6 இடங்களில் ரெய்டு!

நர பரத் ரெட்டி எம்எல்ஏவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
நர பரத் ரெட்டி எம்எல்ஏவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

கர்நாடகா மாநிலம், பெல்லாரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நர பரத் ரெட்டிக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ நர பரத் ரெட்டி
காங்கிரஸ் எம்எல்ஏ நர பரத் ரெட்டி

கர்நாடகா மாநிலம், பெல்லாரி தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் நர பரத் ரெட்டி. பெல்லாரி, பிரபல சுரங்க தொழிலதிபர் ஜனார்தன் ரெட்டியின் கோட்டையாக கருதப்படும் இடம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜனார்தன் ரெட்டியின் சகோதரர் ஜி.சோமசேகர் ரெட்டி, கேஆர்பிபி கட்சி சார்பில் போட்டியிட்ட ஜனார்த்தன் ரெட்டியின் மனைவி அருணா லட்சுமி ஆகியோரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நர பரத் ரெட்டி வெற்றிவாகை சூடினார்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

கர்நாடகாவின் இளம் தலைவரான நர பரத் ரெட்டிக்குச் சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர, சென்னையில் உள்ள பரத் ரெட்டியின் அலுவலகம், அவரது தந்தையின் அலுவலகம், அவரது மாமா பிரதா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் என முக்கிய இடங்களில் சோதனை தீவிரமாக நடந்துவருகிறது.

பெங்களூரில் இருந்துவந்த அதிகாரிகள் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையை மேற்கொண்டுள்ளனர். பரத் ரெட்டி மற்றும் அவரது உறவினர்கள் மீது எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in