திமுக நிர்வாகியின் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்... நீலகிரியில் பரபரப்பு!

நீலகிரியில் திமுக நிர்வாகியின் காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.8.59 லட்சம் பணம் பறிமுதல்
நீலகிரியில் திமுக நிர்வாகியின் காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.8.59 லட்சம் பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திமுக ஒன்றிய செயலாளர் காரில் இருந்து 8 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஜக்கனாரை அடுத்த சக்கத்தா ஹட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் என்பவரது கார் வந்தது. இந்த காரை திமுக இளைஞர் அணியை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டி வந்தார்.

தேர்தல் பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையிலான குழு அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

நீலகிரியில் திமுக நிர்வாகியின் காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.8.59 லட்சம் பணம் பறிமுதல்
நீலகிரியில் திமுக நிர்வாகியின் காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.8.59 லட்சம் பணம் பறிமுதல்

காரில் 8.59 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் சொல்லப்பட்டதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் காரில் இருந்து கட்டு கட்டாக பணம் பிடிபட்டுள்ளது நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in