ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை... காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை... காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்பி-யுமான ராகுல் காந்தி, கூடலூர் அடுத்த பந்தலூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் வயநாடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக செல்ல உள்ளார். இதையடுத்து கேரள மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் அவரை வரவேற்பதற்காக கூடலூரில் உள்ள ஹெலிபேடில் காத்திருந்தனர். ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 5 நிமிடங்களுக்கும் மேல் இந்த சோதனை நடைபெற்றது.

 ஆ.ராசா
ஆ.ராசா

இதனிடையே ராகுல் காந்தியை சந்திப்பதற்காக வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளை உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுத்ததால் பாதுகாப்பு படையினருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும் வாய்ப்பு உருவானதால் அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பந்தலூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் ஆ.ராசாவை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றினார்.

இதையும் வாசிக்கலாமே...   


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in