திறன் வழி மதிப்பீட்டு தேர்வு... பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

அனைத்து அரசு பள்ளிகளிலும் அக்டோபர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 20-ம் தேதிக்குள் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டங்களில் ஒன்று மாநில மதிப்பீட்டு திட்டம். இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைக் கொண்டு மாணவ, மாணவிகளின் கற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். அடுத்த கட்டமாக சில புதிய திட்டங்களை தீட்டவும் இது பெரிதும் உதவுகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

இந்நிலையில் நடப்பு மாதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் வரும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டுதல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளுக்கான கேள்வித்தாள் https://exams.tnschools.gov.in இணையதளம் வாயிலாக முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். இந்த கேள்வித்தாள்களை ஒருநாள் முன்கூட்டியே அரசு பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் 1417 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

தேர்வு தொடங்கும் முன்பாக எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம். இதற்காக அரசு பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரின்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தேர்வுகள் 40 நிமிடங்கள் நடத்தப்பட வேண்டும். மொத்தம் 25 கேள்விகளில் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற வகையில் கொல்குறி வகை கேள்விகளாக இடம் பெற்று இருக்கும்.

விடைகளைக் கேள்வித்தாளிலேயே எழுத வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் சம்பந்தப்பட்ட வகுப்பின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in