வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை... தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் இதுவரை ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின்
தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த மாதத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.  அதில் இதுவரை இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சென்று பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நேற்று காலை நாடு திரும்பினார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

"திமுக ஆட்சி பொறுப்பேற்ற 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு ஈர்ப்பது பற்றி இதுவரை வரைவு அளிக்க வெளியிடப்படவில்லை.

ஸ்பெயினில் முதல்வர்
ஸ்பெயினில் முதல்வர்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து 20 நாட்களுக்குள் முதலமைச்சர் ஸ்பெயின் சென்றது ஏன்? ஸ்பெயினில் உடன்பாடு செய்த மூன்று நிறுவனங்களின் இரண்டு நிறுவனங்களின்  அலுவலகங்கள்  தமிழகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.  அந்த நிறுவன அலுவலகங்கள் தமிழகத்தில் உள்ளபோது அங்கு சென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டது ஏன்?

முதலமைச்சர் ஸ்பெயின் சென்றது முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீட்டைச் செய்யவா?" என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக முன்னாள் மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான எல். முருகன் சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in