ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் என்னாச்சு? வேளாண் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடியார்!

செய்தியாளர்களிடம் பேசும் எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களிடம் பேசும் எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

"வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை" என, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
பட்ஜெட் தாக்கல் செய்யும் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், "இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இது குறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "பொது நிதிநிலை அறிக்கையில் இருந்து தனியாக பிரித்து வேளாண் பட்ஜெட் என்று தனியாக தாக்கல் செய்வதுதான் மிச்சம். புதிதாக வேறு ஒன்றும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இல்லை. புதிய திட்டங்களோ கூடுதல் நிதி ஒதுக்கீடோ இல்லாத இந்த வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு விலை ரூ.2500  தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. இந்த வேளாண் பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல, ஒரு மெட்ரி டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், அதை வழங்காமல் மத்திய அரசு வழங்கும் ஆதார விலையுடன் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.250 வழங்கப்படும் என்று மட்டும் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து செயல்படுகிறது இந்த அரசு.  டெல்டா மாவட்டங்களில் 2023ம் ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதை நம்பி சுமார் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், தற்போது தண்ணீர் இல்லாமல் அவை முற்றிலும் கருகி பாதிக்கப்பட்டது. குறுவை சாகுபடி பயிர் காப்பீடு திட்டத்தில் இடம் பெறாத காரணத்தினால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. 

அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் வேளாண் பட்ஜெட்டிலும் அதுகுறித்து குறிப்பிடவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே குறுவை சாகுபடி பயிர் காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.  இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ள சம்பா, மற்றும் தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தென்னை விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இதில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் செயல்படாமல் உள்ள நிலையில்  அதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை" என்று விமர்சித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in