கேஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்பி வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

அமலாக்கத்துறை - அரவிந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத்துறை - அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஆகியோர் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிரடி ஆய்வினை தொடங்கியிருக்கிறது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டபோதும் அவற்றை அரவிந்த் கேஜ்ரிவால் தவிர்த்து வந்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி, நவம்பர் 2 அன்று தொடங்கி பிப்.2 வரை, 5 முறை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை சோர்ந்து போனது.

தனக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் உள் நோக்கமுடையவை என்றும் சட்ட விரோதமானவை என்றும் கேஜ்ரிவால் சாடி வந்தார். சம்மனுக்கு உடன்பட்டு ஆஜரானால் அடுத்த நடவடிக்கையாக அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்பதால், அவர் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த சம்மன்களை தவிர்த்து வந்தார்.

டெல்லியில் இன்றைய அமலாக்கத்துறை ஆய்வு
டெல்லியில் இன்றைய அமலாக்கத்துறை ஆய்வு

ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் சத்யேந்திர ஜெயின் என பிரதான தலைவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல மாதங்கள் ஆகியும் அவர்களால் இன்னும் ஜாமீனில் வெளிவரமுடியவில்லை. அந்த வரிசையில் கேஜ்ரிவாலையும் சேர்க்க பாஜக துடிப்பதாக கேஜ்ரிவால் குற்றம்சாட்டுகிறார்.

திட்டமிட்டு சம்மன்களை தவிர்க்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்ற உதவியை அமலாக்கத்துறை நாடியது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கை, நாளை விசாரிக்க உள்ளது. இதனிடையே இன்னொரு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என்.டி.குப்தா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலர் பிபவ் குமார் ஆகியோரின் வீடுகளில், இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி ஜல் போர்டு பணமோசடி வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமலாக்கத்துறையை விமர்சித்தும், அவை தொடர்பான பல அரசியல் சார்பு விவகாரங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், ஆம் ஆத்மியின் டெல்லி அமைச்சர் அதிஷி பத்திரிகையாளர் சந்திப்புக்கு திட்டமிட்டிருந்த நேரத்தில், ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை இன்று பாய்ந்துள்ளது.

மக்களவையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளை சாட
மக்களவையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளை சாட

மேலும், நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை விவகாரத்தையும் விவரித்தார். மத்திய விசாரணை அமைப்புகளை ஆளும்கட்சி தவறாகப் பயன்படுத்துவதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்ததோடு, ஊழல்வாதிகள் மீதா நடவடிக்கை தொடரும் என்றும், அவர்கள் தாங்கள் கொள்ளையடித்ததை திருப்பித் தந்தேயாக வேண்டும் என்றும் மோடி சூளுரைத்தது குறிப்பிடத்தக்கது

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in