ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் ஒரு மரக்கன்று; தேர்தல் ஆணையத்தின் பசுமை வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வரவேற்பு!

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி
தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடியில் பதிவாகும் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு மரக்கன்று நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியில் 197 வது பாகத்துக்கென புதிதாக மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அருந்த மண் பானையில் குடிநீர்
பொதுமக்கள் அருந்த மண் பானையில் குடிநீர்

மேலும் வாக்குச்சாவடி மையத்தில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு, தேர்தல் திருவிழாவிற்கு வாக்காளர்களை வரவேற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தோரணங்கள், தரை விரிப்புகள், தென்னை மர ஓலைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அலங்காரங்கள் அனைத்தும் பசுமையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர், கேன்களில் இல்லாமல் மண் பானைகளிலும், மண் குவளைகளிலும் வழங்கப்படுகிறது.

ஆர்வத்துடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்
ஆர்வத்துடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்

இந்த மையம், வாக்குச்சாவடி பணியாளர்களையும், வாக்காளர்களையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு இங்கு பதிவாகும் ஒவ்வொரு வாக்குக்கும் ஒவ்வொரு மரக்கன்று நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in