அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது; உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த 2022ம் ஆண்டு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”அதிமுக கட்சியில் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக, ஜூலை 11ம் தேதி 2022ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மேலும், “இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த இடைக்கால கோரிக்கை வைத்துள்ளேன். அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முடிந்து, பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர். மேலும் மனுவை தள்ளுபடி செய்ததோடு, மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறும் கூறி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in