கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. சம்பங்கி மார்தொட்டி, முனியப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் மதியம், 12:53 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோவிலும் உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறுகையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி அருகிலுள்ள வனப்பகுதியில், லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்
தகவலறிந்து அப்பகுதியில் அதிகாரிகள் சென்றுள்ளனர். லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. இது குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழகத்தில் நில அதிர்வுகள் என்பது அரிதிலும் அரிது. அப்படியிருக்கையில் கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!
அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!
நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!