புதிய தமிழகம் 3 தொகுதிகளில் போட்டி... சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

தென்காசி
தென்காசி

மக்களவைத் தேர்தல்  வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் கூட்டணியை இறுதி செய்யவும் தொகுதிகள்  பங்கீட்டை முடிவு செய்யவும் கட்சிகள் பரபரத்துக்  கிடக்கின்றன.  தேசிய அளவில் பாஜக தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணியை இறுதி செய்யும்  பணியில் அக்கட்சி இறங்கியுள்ளது.

நேரடியான பேச்சுவார்த்தைகளை பாஜக தமிழ்நாட்டில் இன்னும் தொடங்காத நிலையில் மறைமுகமாக கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்யவும்,  தொகுதிகள்  பங்கீட்டை உறுதி செய்யவும் பாஜக முயன்று வருகிறது. அதன்படி புதிய தமிழகம், புதிய நீதி கட்சி,  இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் பாமக மற்றும் தேமுதிகவை இணைக்க முயன்று வருகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

இவர்களில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியை ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.  இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் இரண்டு முதல்  மூன்று தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்

2019-ம் வருட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட் வழங்கப்பட்டிருந்தது. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் 2 முதல் 3 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும்,  கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும்  அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in