தேவேந்திர குல வேளாளர் மக்களை ஏமாற்றி விட்டது...பாஜக மீது டாக்டர் கிருஷ்ணசாமி பாய்ச்சல்!

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி சேரும் என வெகு நாட்களாக கூறி வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இணக்கமாக இருந்து வந்தார். பாஜகவின் கொள்கைகளுக்கும், நிலைப்பாட்டுக்கும் தமிழகத்தில் ஆதரவான கருத்துக்களை அவர் பேசி வந்தார். திமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவாக  இவரும் தனது கருத்துக்களைத் தெரிவிப்பது வழக்கம்.

இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை இன்றைய தினம் அவர் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

இன்று அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்று இல்லை. புதிய தமிழகம் கட்சிக்கு, வருகின்ற மக்களவைத் தேர்தல் ஒரு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட உள்ளோம். கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. அரசியல் சூழலை முழுமையாக ஆய்வு செய்து கூட்டணி இறுதியாகும். 

தற்போது புதிய தமிழகம் கட்சி தேர்தல் கள நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறது. தேர்தல் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்ட வெள்ளத்திற்கு உரிய நிதியைப் பெற மாநில அரசு போராடவில்லை. மாநில முதல்வர்கள் டெல்லியில் போராடும் நிலை ஏற்படுவது ஆரோக்கியமான போக்கு கிடையாது. மாநில அரசுக்கு உரிய நிதி வழங்காதது சர்வாதிகாரப் போக்கு. நிதி பகிர்வில் வெளிப்படைத் தன்மை என்பது மிகவும் அவசியம்.

அதிமுக-பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதிமுக-பாஜக இடையே விரிசல் அதிகரித்து, வடதுருவம் தென்துருவம் போல் செயல்படுகிறது. இந்நிலையில் அதிமுக-பாஜக மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது"  என்று கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கள் மூலம், பாஜகவுடன் கூட்டணி அமைக்க புதிய தமிழகம் கட்சிக்கு ஆர்வமில்லை என்று வெளிப்படையாகியுள்ளது. அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in