கூட்டணிக்கு யாரும் வரவில்லை என சோர்வடைய வேண்டாம்... தொண்டர்களுக்கு எஸ்.பி.வேலுமணி ஆறுதல்!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என தவறாக சிலர் கிளப்பி விடுகின்றனர், கட்சியினர் சோர்வாகிவிடக்கூடாது, கூட்டணியை பொதுச்செயலாளர் பார்த்து கொள்வார் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து வரும் 9ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராம், வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ செல்வராஜ், கிணத்துகடவு எம்.எல்.ஏ தமோதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”அவினாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமான கூட்டத்தை சேர்க்க வேண்டும். ஆ.ராசா முன்பு எடப்பாடியாரின் தாயாரை விமர்சித்தார். இன்று எம்.ஜி.ஆரையும் விமர்சித்துள்ளார். ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் இப்பொழுது வரை கண்டிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வரக்காரணம் எம்.ஜி.ஆர். ஒப்பற்ற தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை இப்படி பேசி இருக்கின்றார். மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

மேலும், “ 3 ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். திமுகவிற்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை. அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து போவார்கள். 85 வயசான ஒரு சிலர் இந்த கட்சியை விட்டு போவார்கள். நம்முடைய பணிகளை விசுவாசமாக செய்ய வேண்டும். நமக்கு போட்டி திமுக மட்டும்தான். திமுக - பாஜகவிற்கு போட்டி என்று சொல்வார்கள். கூட்டணியை பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார். யாரும் கூட்டணிக்கு வரவில்லையென தவறாக கிளப்பி விடுகின்றனர். கட்சியினர் சோர்வாகி விடக்கூடாது. நமக்கு எதிரி திமுக மட்டுமே” என்று தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்களை போல செயல்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் எந்த திட்டமுமே வரவில்லை. குடிநீர் பிரச்சினை இருக்கின்றது. மக்கள் பிரச்சினைக்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கின்றோம்” என தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று ஓபிஎஸ் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, பதில் அளிக்காமல் எஸ்.பி.வேலுமணி கிளம்பிச் சென்றார்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in