வாக்குப்பதிவுக்கு முன்பு ரூ.14,000 கோடியை பயனாளிகளுக்கு வழங்க கூடாது... ஆந்திர முதல்வருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

வாக்குப்பதிவுக்கு முன்னதாக பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளுக்கு ரூ.14,000 கோடி வழங்குவதை நிறுத்துமாறு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் கே.எஸ். ஜவஹர் ரெட்டிக்கு தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலர் சஞ்சய் குமார் அளித்துள்ள உத்தரவில், ‘ஆறு வெவ்வேறு நேரடிப் பண பரிமாற்றத் திட்டங்களின் (டிபிடி) பயனாளிகளின் கணக்குகளில், மே 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரூ14,165.66 கோடியை வரவு வைக்க ஆந்திராவின் ஜெகன்மோகன் அரசு ஆலோசித்து வருவதாக ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த நிதி நீண்ட காலத்திற்கு முன்பே விடுவிக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர் ஆசரா திட்டத்தின் கீழ் முதல்வர் ஜனவரி 23 அன்று ரூ.6,394 கோடியை வெளியிட்டார். பிப்ரவரி 28 அன்று ஒய்எஸ்ஆர் கல்யாணமஸ்து மற்றும் ஷாதி தோஃபாவின் கீழ் ரூ.78.53 கோடி; மார்ச் 1 அன்று ஜெகன்னா வித்யா தீவேனாவின் கீழ் ரூ.708.68 கோடி; மார்ச் 6 அன்று விவசாயிகளின் உள்ளீட்டு மானியத்திற்கு ரூ.1,294.59 கோடி; மார்ச் 7 அன்று ஒய்எஸ்ஆர் செய்யுதா திட்டத்தின் கீழ் ரூ.5,060.49 கோடியும், மார்ச் 14 அன்று ஒய்எஸ்ஆர் இபிசி நெஸ்தம் திட்டத்தின் கீழ் ரூ 629.37 கோடியும் விடுவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இதன் மூலமாக மார்ச் 16, 2024 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்னதாகவே, ஆறு திட்டங்களின் கீழ் நிதி பரிமாற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது தெளிவாகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்பே நிதி வெளியிடப்பட்ட போதிலும், மேற்கூறிய திட்டங்களின் கீழ் ஜெகன் அரசாங்கம் வங்கிகள் மூலம் பணத்தை பயனாளிகளிக்கு வரவு வைக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் வரும் மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், அதாவது வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே 13 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்பு பயனாளிகளின் கணக்குகளில் உதவித்தொகையை வரவு வைக்க மாநில அரசு ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணையம் அறிந்தது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 இன் பிரிவு 126 இன் கீழ் "அமைதி காலம்" ஆகும். எனவே தேர்தல் நடத்தை விதிகளின்படி, அதிகாரத்தில் இருக்கும் கட்சி, மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களிலோ, அதன் தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக அதன் அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தக் கூடாது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்தவிதமான நிதி மானியங்களையோ அல்லது அதன் வாக்குறுதிகளையோ அறிவிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்பே, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பணப் பரிமாற்றம், இப்போது தேர்தல் நாளுக்கு மிக அருகில் பயனாளிகளுக்கு வழங்கப்படுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். இது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு இது நன்மை பயக்கும்.

தகுதியான பயனாளிகளுக்கான பலன்கள் நீண்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படக்கூடாது. இருப்பினும் மாநில அரசாங்கம் அதை சுமார் ஐந்து மாதங்கள் தாமதப்படுத்தியுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in