மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்...மக்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு!

திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு
திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடித்துச் செல்லப்படுவது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரிய திமுக உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் அடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக எம்.பி-க்கள்
திமுக எம்.பி-க்கள்

கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வரும் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை  இலங்கைக் கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெருமளவில் பாதித்துள்ளது. 

கடந்த 2023-ம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. 

டி.ஆர் பாலு எம்.பி
டி.ஆர் பாலு எம்.பி

இதுகுறித்து மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில் 'பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் ஏதுவாக, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திடவும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றிட வேண்டும். 

கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது சாத்தியமாகும் என்பதால், இந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இலங்கை வசம் தற்போதுள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து மக்களவையில் இன்று விவாதிக்க வேண்டும் திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஏற்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். அவையை ஒத்தி வைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்களின் குழுத் தலைவர் டி ஆர் பாலு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். அதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தமிழக மீனவர்கள் நலனைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அவையை விட்டு வெளியேறினர்.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in