கடைசி நாளில் கலக்கியெடுத்த திமுக... இரு அவைகளில் இருந்தும் வெளிநடப்பு!

மக்களவையில் பேசும் டி.ஆர்.பாலு
மக்களவையில் பேசும் டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக எம்பி-க்கள் பாஜக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இறுதியாக மீனவர் பிரச்சினைக்காக வெளிநடப்பும் செய்து அதிரடி காட்டினர். 

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது.  கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1ம் தேதி மத்திய அரசின் 2024 – 2025 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதன்பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீது காரசார விவாதம் நடைபெற்று வந்தது. நேற்று வரை கூட்டத் தொடர் நடக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ராமர் கோயில் கட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக பிப்ரவரி 10-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என பின்னர் அறிவித்தது.

இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையையும் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதமும்  நடைபெற்றது.

கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்று அயோத்தி ராமர் கோயில் கட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற  பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால்,  இன்று காலை மக்களவை கூடியதும் மக்களவை திமுக குழு் தலைவர் டி.ஆர். பாலு,  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

அதற்கு சபாநாயகர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினார்கள். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மக்களவை நடவடிக்கைகள் சற்று நேரம் பாதிக்கப்பட்டது.

இதேபோல மாநிலங்களவையில் தமிழகத்தின் வெள்ளப் பாதிப்பு குறித்து  விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பி-யான திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தார்.  ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்ட சிவா, தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்துப் பேசினார்.  அதைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய கூட்டத்தை ராமர் கோயில் தீர்மானம் நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு முடிக்க வேண்டும் என்று நினைத்த பாஜகவுக்கு  தமிழகத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுகவினர் இரு அவைகளையும் அமளியாக்கிவிட்டு வெளிநடப்பு செய்தது சற்றே சங்கடம் தான்.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in