எம்.பியாகவே இருக்கவே தகுதி இல்லை... டி.ஆர்.பாலு பேச்சால் முடங்கிய மக்களவை!

திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு
திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு

மக்களவையில் தனது பேச்சின் போது இடைமறித்த இணை அமைச்சரை எம்.பியாக இருக்கவே தகுதி இல்லை என திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடுமையாக விமர்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மக்களவையில் இன்று மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
புதிய நாடாளுமன்றக் கட்டிடம்

அப்போது நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது, ”தேசிய பேரிடர் நிதியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவது போல் தமிழகத்துக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து பேசிய மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் ஒதுக்கக்கோரி மக்களவையில் பேசினர்.

மத்திய இணை அமைச்சர்கள் டி.ஆர்.பாலுவுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கம்
மத்திய இணை அமைச்சர்கள் டி.ஆர்.பாலுவுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கம்

இதையடுத்து திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு விவாதத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய் குறுக்கீடு செய்தார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு," நீங்கள் எம்.பி.,யாக இருக்கவும், மத்திய அமைச்சராக இருக்கவும் தகுதி இல்லாதவர்" என கடுமையாக விமர்சித்தார். டி.ஆர்.பாலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை சிறிது நேரம் முடங்கியது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in