சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பும் கூட்டணிக் கட்சிகள்... திமுக கவலை!

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முறை தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளதால் மக்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் உடன்பாடு செய்த திமுக தலைவர்
கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் உடன்பாடு செய்த திமுக தலைவர்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளையும் விட்டு விடாமல் அரவணைத்துச் செல்லும் வகையில், திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் காரணமாக விரைவில் தொகுதிப்  பங்கீடுகள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறை பேச்சுவார்த்தையில் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தும் ஒரு விஷயம் திமுகவை மிகவும் பாதித்துள்ளது.

இந்த முறை நாங்கள் எங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடுவோம் என கூட்டணிக் கட்சிகள் திமுகவிடம் தெரிவித்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது  காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, கொமதேக, முஸ்லிம் லீக், ஐஜேகே உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டன.

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்

இதில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும் தோல்வியடைந்தார். இதில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. விசிகவை பொறுத்தவரையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிட்டார். அக்கட்சியின் மற்றொரு வேட்பாளரான ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். 

இதனால் மக்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மூன்றாவது பெரிய கட்சியாக திமுக அங்கீகரிக்கப்பட்டது.  இந்த சூழலில் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றன.  விசிக பானை சின்னத்திலும், மதிமுக பம்பரம் சின்னத்திலும்  போட்டியிட விரும்புகின்றன.

திமுக கூட்டணியில் இணைய உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தில்தான் தேர்தலைச் சந்திக்க போவதாக அறிவித்துவிட்டது. இதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கம்போல சொந்த சின்னங்களில் தான் தேர்தலைச் சந்திக்கின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தமுறை வெகுவாக குறையும். எனவே, இந்த விவகாரம் குறித்து என்ன செய்யலாம் என்று திமுக தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும்  என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் இந்த பிடிவாதத்தால் சென்றமுறையை விட இந்த முறை திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in