வீடுவீடாக பணம், வேட்டி சட்டை விநியோகம்... சேலத்தில் திமுகவினர் மீது ஆதாரத்துடன் புகார்!

கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பண விநியோகம் என புகார்
கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பண விநியோகம் என புகார்

சேலம் அருகே திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம், வேட்டி சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று விநியோகித்தது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்திலும், புதுவையிலும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தலை முறையாக நடத்தவும், அரசியல் கட்சிகள் பரிசுப் பொருட்களோ, பணமோ வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பண விநியோகம் என புகார்
கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பண விநியோகம் என புகார்

இந்த நிலையில் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தலைவாசல் அருகே மணி விழுந்தான், ராமசேஷாபுரம் பகுதியில் நேற்று மாலையுடன் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். இருப்பினும் திமுகவினர் இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம், வேட்டி சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். அதேபோல் தலைவாசல் அருகே சார்வாய் புதூர் ஊராட்சிக்குட்பட்ட சம்பேரி பகுதியில் திமுகவினர் வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பண விநியோகம் என புகார்
கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பண விநியோகம் என புகார்

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில் பணம் கொடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in