அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்... பிரேமலதா நம்பிக்கை!

பிரேமலதா  விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில், அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்” என்று நம்புவோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

அதில், ’024 மக்களவைத் தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணியாற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரேமலதாவுடன் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன்
பிரேமலதாவுடன் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன்

ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பை அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in